பருவதமலையின் உயரம் எவ்வளவு தெரியுமா? Mr Paruvathamalai

 திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தை உட்பட்ட தென் மகா தேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது இயற்கை அற்புதமான பருவதமலை.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2300 அடி மட்டுமே. ஆனால் அதே திருவண்ணாமலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பருவத மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4560 அடி உயரம் கொண்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள மலைகள் குறித்து பார்த்தோம் என்றால் மிகப்பெரிய மலை பருவதமலை தான். இரண்டாவதாக உள்ள மலை பெரிய மலை என்று அழைக்கப்படக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தை உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மேல்தான். இந்த மலை சுமார் 2800 அடிக்கு மேல் உயரம் இருக்கிறது உயரத்தில் குறைவாக இருந்தாலும் அகலத்தின் படர்ந்து காணப்படுகிறது. 

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற மூன்று மலைகள் என்று குறிப்பிட்டால் ஒன்று மிகப்பெரிய பிரமாண்டமான 4560 அடி உயரமுள்ள பருவதமலை. இங்கே மலைக்கு மேல் மல்லிகார்ஜுனர் மற்றும் பிரம்மராம்பிகை தெய்வங்கள் உள்ளது. ஆதலால் பருவதமலை ஒரு ஆகாயத்தில் உள்ள சிவத்தலமாக பார்க்கப்படுகிறது. 

அதற்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ள புகழ் பற்ற இடம் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலை. சுமார் 2300 அடி உயரம் உள்ள இந்த மலையில் எந்தவித கோவில்களும் கிடையாது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலை இயற்றும் தீபம் மிகப் பிரபலமானது. இந்த ஒரு புகழைத் தவிர அண்ணாமலைக்கு வேற எந்த புகழும் கிடையாது. 

அடுத்ததாக மூன்றாவது இடத்தில் உள்ள பிரபலமான மலை திருவண்ணாமலை வந்தவாசியில் அமைந்துள்ள வெண்குன்றம் மலைதான். இந்த வெண்குன்றம் மலையில் தவளகிரிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1500 அடி உயரம் உள்ள இந்த மலையும் பர்வத மலைக்கு அடுத்தபடியாக ஒரு சிவத்தலமாக பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post